/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிக் பாக்சிங் பிரீமியர் லீக்: பைனலில் 'டிரா டேஷர்ஸ்' அணி
/
கிக் பாக்சிங் பிரீமியர் லீக்: பைனலில் 'டிரா டேஷர்ஸ்' அணி
கிக் பாக்சிங் பிரீமியர் லீக்: பைனலில் 'டிரா டேஷர்ஸ்' அணி
கிக் பாக்சிங் பிரீமியர் லீக்: பைனலில் 'டிரா டேஷர்ஸ்' அணி
ADDED : அக் 27, 2025 02:55 AM

சென்னை: சென்னையில் நடக்கும் கிக் பாக்சிங் பிரீமியர் லீக் போட்டியில், டிரா டேஷர்ஸ், சேலம் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
தமிழக கிக் பாக்சிங் சங்கம் மற்றும் ஸ்போர்டோரமா இணைந்து நடத்தும் மாநில அளவிலான கிக் பாக்சிங் பிரீமியர் லீக் போட்டியின் முதல் சீசன், கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு பாக்சிங் அரங்கில் நடந்து வருகிறது. போட்டி நாக்- அவுட் முறையில் நடக்கிறது.
தகுதிச்சுற்று முடிவில் டிரா டேஷர்ஸ், சேலம் சூப்பர் ஸ்டார்ஸ், சென்னை டைட்டன்ஸ், திருச்சி டி.எஸ்.யு., வீரன்ஸ் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதி போட்டியில், சென்னை டைட்டன்ஸ் அணி, டிரா டேஷர்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இதில், டிரா டேஷர்ஸ் அணி, 14 - 12 என்ற புள்ளிக்கணக்கில், சென்னை டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதி போட்டியில், திருச்சி டி.எஸ்.யு., வீரன்ஸ் அணியை, 16 - 8 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய சேலம் சூப்பர் ஸ்டார்ஸ் அணி, இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.
ரயில்வே பாக்சிங் இந்திய ரயில்வே அணிகளுக்கிடையேயான பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் பிரிவுக்கான அரையிறுதி போட்டிகள் நேற்று முன்தினம் இரவு நடந்தன.
இதில், 72 கிலோ பிரிவில் போட்டியிட்ட தெற்கு ரயில்வே அணியின் தமன்னா, வட மேற்கு ரயில்வே அணியின் பவித்ராவை 5 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
அதேபோல், 51 கிலோ அரையிறுதி போட்டியில், தென் கிழக்கு மத்திய ரயில்வே அணியின் ரேனுவை, வட கிழக்கு ரயில்வேயின் நீத்து, 3 - 2 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

