/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிக் பாக்சிங்: தமிழக வீரர்கள் சாதனை
/
கிக் பாக்சிங்: தமிழக வீரர்கள் சாதனை
ADDED : அக் 14, 2025 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, உஸ்பெகிஸ்தான் கிக் பாக்சிங் சங்கம் மற்றும் வாக்கோ உலக கிக் பாக்சிங் கூட்டமைப்பு சார்பில், உலக கோப்பைக்கான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள தாஷ்கண்ட் நகரில், நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதில் பங்கேற்ற இந்திய அணியில் களமிறங்கிய தமிழக வீரர்கள், ஒன்பது தங்கம், நான்கு வெள்ளி, 11 வெண்கலம் என, மொத்தம் 24 பதக்கங்களை வென்று அசத்தினர்.