ADDED : மார் 14, 2024 12:38 AM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி, சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை, பெருவாயல் மற்றும் புதுவாயல் பகுதியில், கடந்த 11ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரிடம், மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் மொபைல்போன்களை வழிப்பறி செய்தது.
மொபைல்போன் பறிகொடுத்த கும்மிடிப்பூண்டி கருணாகரன், 40, கவரைப்பேட்டை ரவி, 54, ஜெகநாதபுரம் சுரேந்திரன், 30, ஆகியோர் அளித்த புகாரின்படி, கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், ஆண்டார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்களை, கவரைப்பேட்டை போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
