/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'குடி'மகன்கள் கூடாரமான கே.கே.நகர் பேருந்து நிறுத்தம்
/
'குடி'மகன்கள் கூடாரமான கே.கே.நகர் பேருந்து நிறுத்தம்
'குடி'மகன்கள் கூடாரமான கே.கே.நகர் பேருந்து நிறுத்தம்
'குடி'மகன்கள் கூடாரமான கே.கே.நகர் பேருந்து நிறுத்தம்
ADDED : செப் 25, 2024 12:28 AM

கே.கே.நகர், கே.கே.நகர் முனுசாமி சாலை பேருந்து நிறுத்தம், குடிமகன்கள் கூடாரமாக மாறி உள்ளது. கே.கே.நகர் மற்றும் நெசப்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கியமான சாலையாக, மேற்கு கே.கே.நகர் முனுசாமி சாலை உள்ளது.
இச்சாலையில், ஆர்.டி.ஓ., மைதானம், பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை ஆகியவை அமைந்துள்ளன. இச்சாலையில் உள்ள நடைபாதை மற்றும் சாலையோரம் ேஷர் ஆட்டோ மற்றும் பிற வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இங்கு, ஆர்.டி.ஓ., மைதானம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம், குடிமகன்கள் கூடாரமாக மாறி உள்ளது.
பகலிலும் 'குடி'மன்கள் போதையில் தன்னிலை அறியாமல் படுத்திருப்பதால், பெண் பயணியர் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.