/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நான்கு வெவ்வேறு இடங்களில் கத்தியால் வெட்டி வழிப்பறி: மூவர் கைது
/
நான்கு வெவ்வேறு இடங்களில் கத்தியால் வெட்டி வழிப்பறி: மூவர் கைது
நான்கு வெவ்வேறு இடங்களில் கத்தியால் வெட்டி வழிப்பறி: மூவர் கைது
நான்கு வெவ்வேறு இடங்களில் கத்தியால் வெட்டி வழிப்பறி: மூவர் கைது
ADDED : ஜன 14, 2024 02:39 AM

காசிமேடு, துறைமுகம் செல்ல, காசிமேடு, ஜீரோ கேட் நுழைவாயில் அருகே லாரிகள் வரிசையில் காத்திருக்கும்.
நேற்றும் வழக்கம்போல் லாரிகள் வரிசையில் நின்றிருந்தது. இதில் திருநெல்வேலி, அம்பை தாலுகாவை சேர்ந்தவர் டிரைவர் கார்த்திக், 37.
இவர் பாலிமர் கம்பெனியிலிருந்து கண்டெய்னர் லாரியில் பொருள்களை ஏற்றிக் கொண்டு ஜீரோ கேட் நுழைவாயிலில் செல்ல சர்வீஸ் சாலையில் நின்றிருந்தார்.
அதேபோல், மயிலாடுதுறையை சேர்ந்தவர் டிரைவர் ஸ்ரீதர், 28; இவரும் லாரியில் பொருள்களை ஏற்றிக் கொண்டு ஜீரோ கேட் நுழைவாயிலில் செல்ல சர்வீஸ் சாலையில் நின்றிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூவர் இருவரிடமும் பர்ஸ் மற்றும் மொபைல் போனை கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே கார்த்திக், ஸ்ரீதர் இருவரையும் கையை கத்தியால் வெட்டி விட்டு பர்ஸ் மற்றும் மொபைல் போனைகளை பறித்து சென்றனர்.
அதேபோல், தண்டையார்பேட்டை, அப்பல்லோ மருத்துவமனை ஊழியர் ஹேமந்த் குமார், 25; திருவொற்றியூர், என்.டி.ஓ., குப்பத்தை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் தினேஷ்குமார், 25; திருவொற்றியூர், 5வது மேட்டு காந்தி தெருவை சேர்ந்த சசிகுமார், 50; திருவொற்றியூர், கணக்கர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ், 43 ஆகிய நால்வரை அதே மூவர் போல் கத்தியால் வெட்டிவிட்டு அவரது மொபைல்போன்களை பறித்து சென்றது.
இது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிந்து சம்பவத்தில் ஈடுபட்டு காசிமேடு கடற்கரையில் பதுங்கி இருந்த எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு, 147வது பிளாக்கை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முகேஷ், 22; தண்டையார்பேட்டை, சுனாமி குடியிருப்பு, 'எப்' பிளாக்கை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பரத், 20; புதுவண்ணாரப்பேட்டை, ஏ.இ.கோவில் தெருவை சேர்ந்த யுவராஜ், 18, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து அவர்களிடம் இருந்த எட்டு மொபைல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

