/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அறிவு என்பது ஒருவழி பாதையல்ல: பாரதி பாஸ்கர்
/
அறிவு என்பது ஒருவழி பாதையல்ல: பாரதி பாஸ்கர்
ADDED : ஜன 11, 2025 12:17 AM
சென்னை புத்தக காட்சியின் வெளி அரங்கில் 'புத்தகம் எனும் புதையல்' என்ற தலைப்பில், பாரதி பாஸ்கர் பேசியதாவது:
புத்தகம் வாசிக்கும் மனிதரை, அறிவாளிகள் என்கிறோம். ஆனால், இன்று அனைவரும் 'மொபைல் போன்' பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். இவர்களை எவ்வாறு அழைப்பது?
எது நம் வாழ்க்கையை மலரச் செய்கிறதோ, அதுவே நம் வாழ்க்கைக்கான புதையலாக கருதப்படுகிறது. இந்தப் புதையல்கள், புத்தகம் எனும் வடிவில் நம்மைச் சுற்றி நிறைந்துள்ளன.
புத்தகங்களில் உள்ள ஏதோ ஒரு சொல், ஒரு வாக்கியம், ஒரு கவிதை, நம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும்.
வாழ்க்கையில் உயரம் செல்லச் செல்ல, தனிமையே மிஞ்சும். இந்தத் தனிமையைப் போக்க வல்லவை புத்தகங்கள் மட்டுமே.இந்த பூமி, அனைவருக்கும் எதைத் தருகிறதோ, அதைத்தான் நமக்கும் தரும். நிழல் இல்லாவிட்டால், வெளிச்சத்திற்கு மதிப்பு இல்லை.
அறிவு என்பது ஒரு வழிப்பாதை அல்ல. அது குறிப்பிட்ட துறைக்குள் ஒளிந்து கிடப்பதல்ல. ஒவ்வொரு மனிதருக்கும், அவரவர் துறையில் அறிவு இருக்கும். உலகம் மெச்சும் அறிஞர்களை, சாமானியர்கள் வீழ்த்திய வரலாறுகள் நிறைய உண்டு.
தமிழ் மொழி வளர படைப்பாளிகளே முக்கியக் காரணம். ஆனால், காலம் காலமாக நாம் அவர்களை ஏழையாகவே வைத்திருக்கிறோம்.
பண்பாட்டின் உரைகல்லாக புத்தகங்கள் உள்ளன. புத்தகங்கள் உள்ளவரை புரட்சியாளர்கள் உருவாகிக்கொண்டே இருப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.

