/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கோடம்பாக்கம் மண்டலம் இ - சேவை மையம் 'கிளீன்'
/
கோடம்பாக்கம் மண்டலம் இ - சேவை மையம் 'கிளீன்'
PUBLISHED ON : நவ 09, 2025 12:00 AM

கோடம்பாக்கம்,:துர்நாற்றம் வீசிய கோடம்பாக்கம் மண்டல அலுவலக இ - சேவை மையம், சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டது.
கோடம்பாக்கம் மண்டல அலுவலக வளாகத்தில், இ - சேவை மையம் அமைந்துள்ளது. இங்கு, சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க, தினமும் 50க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
தகர ஷெட்டால் அமைக்கப்பட்ட இ - சேவை மையத்தை ஒட்டி, சிலர் சிறுநீர் கழிப்பதாலும், தேவையற்ற பொருட்கள் குவிக்கப்பட்டிருந்ததாலும், கடுமையாக துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதன் விளைவாக, அப்பகுதியை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், அங்கிருந்த குப்பையை அகற்றி சுத்தம் செய்தனர்.
மேலும், சிறுநீர் கழிக்கப்பட்ட பகுதியையும் சுத்தம் செய்தனர். தொடர்ந்து, அங்கு தேவையற்ற பொருட்கள் குவிக்காத வகையிலும், சிறுநீர் கழிக்காமலும் தடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

