/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொங்கு கோப்பை கூடைப்பந்து எம்.ஓ.பி.வைஷ்ணவ் 'சாம்பியன்'
/
கொங்கு கோப்பை கூடைப்பந்து எம்.ஓ.பி.வைஷ்ணவ் 'சாம்பியன்'
கொங்கு கோப்பை கூடைப்பந்து எம்.ஓ.பி.வைஷ்ணவ் 'சாம்பியன்'
கொங்கு கோப்பை கூடைப்பந்து எம்.ஓ.பி.வைஷ்ணவ் 'சாம்பியன்'
ADDED : அக் 05, 2024 12:19 AM

சென்னை, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லுாரி சார்பில், கொங்கு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், கடந்த வாரம் நடந்தன.
டேபிள் டென்னிஸ், கைப்பந்து, பேட்மின்டன், கூடைப்பந்து உட்பட பல விளையாட்டுகளில், தமிழகத்தின் 60க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
இதில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற சென்னை, நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி.வைஷ்ணவ் கல்லுாரி வீராங்கனையர் துவக்கப் போட்டி முதலே தொடர் ஆதிக்கம் செலுத்தி, அரையிறுதிக்கு முன்னேறினர்.
அரையிறுதியில் பலம் வாய்ந்த ஜேப்பியார் பல்கலை அணியுடன் மோதி, 69- - 41 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றனர்.
அடுத்து நடந்த இறுதிப்போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியை எதிர்த்து ஆடியது. விறுவிறுப்பான இந்த போட்டியில், எம்.ஓ.பி., அணியினர், 87 - -73 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, கொங்கு கோப்பையை கைப்பற்றினர்.
மூன்றாம் இடத்தை ஜேப்பியார் பல்கலை அணியும், நான்காம் இடத்தை கொங்கு பொறியியல் கல்லுாரி அணியும் பிடித்தன.
சிறந்த வீராங்கனையாக எம்.ஓ.பி.வைஷ்ணவ் கல்லுாரி மாணவி மனிஷா தேர்வானார்.