/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தகாத உறவுக்கு வற்புறுத்திய கொத்தனாருக்கு கத்திக்குத்து
/
தகாத உறவுக்கு வற்புறுத்திய கொத்தனாருக்கு கத்திக்குத்து
தகாத உறவுக்கு வற்புறுத்திய கொத்தனாருக்கு கத்திக்குத்து
தகாத உறவுக்கு வற்புறுத்திய கொத்தனாருக்கு கத்திக்குத்து
ADDED : அக் 29, 2024 12:25 AM
செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் பாஸ்கர், 48; கொத்தனார். இதே பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்பவர் முருகன், 38. இருவரும், ஒன்றாக வேலை செய்கின்றனர். திருமணமாகி பிள்ளைகள் உள்ள இருவரும், அடிக்கடி தனியாக சந்தித்து, ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, பாஸ்கரனின் பெற்றோர் வெளியே சென்ற நிலையில், அவரது வீட்டிற்கு முருகன் சென்றுள்ளார். அப்போது, பாஸ்கர் தகாத உறவுக்கு அழைத்துள்ளார். இதற்கு, முருகன் மறுத்துள்ளார். அப்போது, கட்டாயப்படுத்தி தகாத உறவில் ஈடுபட முயன்றதால் ஆத்திரமடைந்த முருகன், காய்கறி வெட்டும் கத்தியால், பாஸ்கர் மார்பில் குத்தினார்.
பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட முருகனை, செம்மஞ்சேரி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.