/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சந்தையில் அடிப்படை வசதிகள் கோரி கோயம்பேடு வியாபாரிகள் போராட்டம்
/
சந்தையில் அடிப்படை வசதிகள் கோரி கோயம்பேடு வியாபாரிகள் போராட்டம்
சந்தையில் அடிப்படை வசதிகள் கோரி கோயம்பேடு வியாபாரிகள் போராட்டம்
சந்தையில் அடிப்படை வசதிகள் கோரி கோயம்பேடு வியாபாரிகள் போராட்டம்
ADDED : நவ 17, 2024 12:11 AM

கோயம்பேடு, கோயம்பேடு சந்தையில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என, கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் நேற்று காலை, போராட்டம் நடந்தது.
கோயம்பேடு சந்தை நுழைவாயில் எண் 7 அருகே, போராட்டத்தில் ஈடுபட்ட சங்க உறுப்பினர்களிடம், அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் பேச்சு நடத்தினர். கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதாக அதிகாரிகள் கூறியதால், வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் முத்துக்குமார் கூறியதாவது:
கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், மாதம் தோறும் பராமரிப்பு தொகையும் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், அங்காடி நிர்வாக குழு, போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில்லை. சிறு மழைக்கே, கோயம்பேடு சந்தை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. மழைநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.
ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. குப்பையை முறையாக அகற்றாததால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
சந்தை வளாகத்தில் பல கழிப்பறைகள், மூடியே காணப்படுகின்றன. அவற்றை திறந்து முறையாக பராமரிக்க வேண்டும். முறையான திட்டமிடல் இல்லாததால், சந்தை முழுதும், எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கும், காய்கறிகள் வாங்க வரக்கூடிய சிறு வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நேர விரயம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

