/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணமான பெண்ணிடம் சீண்டல் கோயம்பேடு வாலிபருக்கு காப்பு
/
மணமான பெண்ணிடம் சீண்டல் கோயம்பேடு வாலிபருக்கு காப்பு
மணமான பெண்ணிடம் சீண்டல் கோயம்பேடு வாலிபருக்கு காப்பு
மணமான பெண்ணிடம் சீண்டல் கோயம்பேடு வாலிபருக்கு காப்பு
ADDED : ஏப் 16, 2025 12:28 AM
மதுரவாயல்கோயம்பேடு காவல் மாவட்டத்தை சேர்ந்தவர், 36 வயது பெண். இவர், கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள சரவணன், 30 என்பவர், அந்த பெண்ணிடம் அடிக்கடி ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 14 ம் தேதி, கடைக்கு சென்று திரும்பி பெண்ணிடம், சரவணன் ஆபாசமாக பேசி, கையால் தாக்கி, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தடுக்க வந்த மகனிடம், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரவாயல் போலீசார், சரவணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
சரவணன் மீது கொலை, அடிதடி, வழிப்பறி உட்பட, ஐந்து வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.