/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோழிக்கோடு பல்கலை கராத்தேவில் சாம்பியன்
/
கோழிக்கோடு பல்கலை கராத்தேவில் சாம்பியன்
ADDED : ஜன 10, 2025 12:18 AM

சென்னை, தென்மேற்கு மண்டல மகளிர் கராத்தே போட்டி வண்டலுாரை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள கிரசன்ட் பல்கலை வளாகத்தில் 6ல் துவங்கியது.
தென்மேற்கு மண்டலஅளவில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், 88 பல்கலையில் இருந்து, 450 மாணவ - மாணவியர் திறமையை வெளிப்படுத்தினர்.
இவற்றில், 'கட்டா, குமிட்' ஆகிய இரு பிரிவிலும் இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டன.
மூன்று நாட்கள் நடந்த அனைத்து போட்டிகள் முடிவில், இருபாலரிலும் சேர்த்து, கேரளாவின் கோழிக்கோடு பல்கலை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இரண்டாமிடத்தை கர்நாடகாவின் ஜெயின் பல்கலை வென்றது.
கேரள பல்கலை மற்றும் தமிழகத்தின் கிரசன்ட் பல்கலை, மூன்று மற்றும் நான்காம் இடங்களை கைப்பற்றி, அகில இந்திய போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.