/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கிருஷ்ண தர்ஷன்' கண்காட்சி பூம்புகார் விற்பனையகத்தில் துவக்கம்
/
'கிருஷ்ண தர்ஷன்' கண்காட்சி பூம்புகார் விற்பனையகத்தில் துவக்கம்
'கிருஷ்ண தர்ஷன்' கண்காட்சி பூம்புகார் விற்பனையகத்தில் துவக்கம்
'கிருஷ்ண தர்ஷன்' கண்காட்சி பூம்புகார் விற்பனையகத்தில் துவக்கம்
ADDED : ஆக 07, 2025 12:44 AM

சென்னை, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, அண்ணாசாலை, பூம்புகார் நிறுவன விற்பனையகத்தில், 'கிருஷ்ண தர்ஷன்' என்ற தலைப்பிலான விற்பனை கண்காட்சி துவங்கி உள்ளது. இதில், இடம் பெற்றுள்ள விதவிதமான கிருஷ்ணர் பொம்மைகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.
தமிழக அரசின் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் எனும் பூம்புகார் நிறுவனம், தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு, கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில், நாடு முழுதும் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில், வரும் 16ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில், 'கிருஷ்ண தரிஷன்' என்ற தலைப்பிலான கண்காட்சி துவக்கி உள்ளது.
புராண கதைகளில் வரும், கிருஷ்ணரின் பாத்திரங்களின்படி, சிலை, படங்கள் அடங்கிய, அரிய தொகுப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
மேலும், பஞ்சலோகம், காகிதக்கூழ், வெண்கலம், பித்தளையால் ஆன புல்லாங்குழல் கண்ணன், ராதாகிருஷ்ணன், பசுவுடன் கூடிய கண்ணன், வெண்ணெய் திருடிய கண்ணன், ஆலிலை கண்ணன், பாமா ருக்மணி கண்ணன் என, பல வடிவ சிலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
கண்காட்சியை முன்னிட்டு, 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. வரும், 16ம் தேதி வரை நடத்தப்படும் இந்த கண்காட்சிக்கு தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
***