/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் வேடமிட்டு திருட்டு கிருஷ்ணகிரி நபர் சிக்கினார்
/
பெண் வேடமிட்டு திருட்டு கிருஷ்ணகிரி நபர் சிக்கினார்
பெண் வேடமிட்டு திருட்டு கிருஷ்ணகிரி நபர் சிக்கினார்
பெண் வேடமிட்டு திருட்டு கிருஷ்ணகிரி நபர் சிக்கினார்
ADDED : அக் 29, 2024 12:20 AM

மாதவரம், அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அபர்ணா ஜெகதீசன், 34. இவர், மாதவரம் தட்டான்குளம் லோட்டஸ் காலனியில், சுண்ணாம்பு கிடங்கு நடத்தி வருகிறார்.
இங்கு, பெயின்ட் தயாரிக்கும் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு, சென்னையின் பல பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வழக்கம் போல, நேற்று காலை நிறுவனத்தை திறந்த போது, பீரோவில் இருந்த பணம் திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின்படி, மாதவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாலை, மாதவரம் இன்ஸ்பெக்டர் பூபாலன் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அங்கு, புர்கா அணிந்திருந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டு, அழைத்து விசாரித்தார். இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில், அது ஆண் நபர் என்பதும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 40, என்பதும் தெரிந்தது.
தொடர் விசாரணையில், அபர்ணா ஜெகதீசனின் நிறுவனத்தில் கலெக் ஷன் பணியில் இருந்த கார்த்திகேயன், நடவடிக்கை சரியில்லாத காரணத்தால், ஆறு மாதங்களுக்கு முன் பணியில் இருந்து நிறுத்தப்பட்டு உள்ளார்.
நேற்று அதிகாலை 2:00 மணியளவில், தான் பணிபுரிந்த அபர்ணா ஜெகதீசனின் சுண்ணாம்பு கிடங்கிற்கு சென்றுள்ளார். அங்கு காவலாளி துாங்கிய நேரத்தில், புர்கா அணிந்து சுவர் ஏறி குதித்து, அலுவலக பீரோவில் இருந்த 1.47 லட்சம் ரூபாயை திருடியது தெரிந்தது.
பின், அங்கிருந்து மாதவரம் பேருந்து நிலையம் சென்ற போது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
இதையடுத்து, கார்த்திகேயனை கைது செய்த போலீசார், பணத்தை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.