/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குமார் சி.சி., அணி அபாரம் கிரிக்கெட்டில் 'த்ரில்' வெற்றி
/
குமார் சி.சி., அணி அபாரம் கிரிக்கெட்டில் 'த்ரில்' வெற்றி
குமார் சி.சி., அணி அபாரம் கிரிக்கெட்டில் 'த்ரில்' வெற்றி
குமார் சி.சி., அணி அபாரம் கிரிக்கெட்டில் 'த்ரில்' வெற்றி
ADDED : டிச 24, 2025 06:34 AM
சென்னை: 'லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் போட்டியில், கடைசி வரை ரசிகர்களை நாற்காலியின் நுனியில் அமர வைத்த விறுவிறுப்பான ஆட்டத்தில், குமார் சி.சி., அணி, குரோம்பேட்டை சூப்பர் கிங்ஸ் அணியை, எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஜெயலட்சுமி நினைவு கோப்பைக்கான, 'லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் போட்டிகள், முகப்பேரில் உள்ள தனியார் கல்லுாரி வளாகத்தில் நடந்து வருகின்றன.
போட்டியில், நகரின் முக்கிய ஒன்பது அணிகள், தலா எட்டு லீக் போட்டிகள் வீதம் மோதி வருகின்றன.
நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில், குமார் சி.சி., - குரோம்பேட்டை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குமார் சி.சி., அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதிரடியான துவக்கத்துடன் ரன்களை குவித்த குமார் சி.சி., அணி, 20 ஓவர்கள் முடிவில், ஐந்து விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை பதிவு செய்தது.
பெரும் இலக்கை துரத்தி களமிறங்கிய குரோம்பேட்டை சூப்பர் கிங்ஸ் அணி, துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி, போட்டியின் கடைசி ஓவர் வரை இழுத்துச் சென்றது.
இருப்பினும், குமார் அணியின் கட்டுப்பாடான பந்துவீச்சு, இறுதி தருணங்களில் கை கொடுத்தது. 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், எட்டு ரன்கள் வித்தியாசத்தில் குமார் சி.சி., அணி த்ரில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்குள் உற்சாகமாக நுழைந்தது.

