/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேணுகோபால சுவாமி கோவிலில் பிப்., 2ல் கும்பாபிஷேகம்
/
வேணுகோபால சுவாமி கோவிலில் பிப்., 2ல் கும்பாபிஷேகம்
வேணுகோபால சுவாமி கோவிலில் பிப்., 2ல் கும்பாபிஷேகம்
வேணுகோபால சுவாமி கோவிலில் பிப்., 2ல் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 30, 2025 12:34 AM
சென்னை: கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம், வரும் பிப்., 2ல் நடக்க உள்ளது.
கோபாலபுரம் இரண்டாவது தெருவில் உள்ள ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவில், 90 ஆண்டுகள் பழமையானது.
இக்கோவிலில் விநாயகர், சுப்பிரமணியர், ராமர், ஆதிசங்கரர், ஆஞ்சநேயர், நவக்கிரகம், அய்யப்ப சுவாமிகள், காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பர சுவாமிகள் ஆகிய சன்னிதிகள் உள்ளன.
புதுப்பிக்கப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேகம், வரும் பிப்., 2 ஞாயிற்றுக்கிழமை காலை 9:15 முதல் 10:15 மணிக்குள் நடக்க உள்ளது. அதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கின.
கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்க, கோபாலபுரம் இந்து சமய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.