/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எர்ணாவூர் முருகன் கோவிலில் கும்பாபி ேஷகம் கோலாகலம்
/
எர்ணாவூர் முருகன் கோவிலில் கும்பாபி ேஷகம் கோலாகலம்
எர்ணாவூர் முருகன் கோவிலில் கும்பாபி ேஷகம் கோலாகலம்
எர்ணாவூர் முருகன் கோவிலில் கும்பாபி ேஷகம் கோலாகலம்
ADDED : ஏப் 17, 2025 12:08 AM

எர்ணாவூர்,
எர்ணாவூர் முருகன் கோவிலில், மஹா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் காமராஜ் நகரில், 60 ஆண்டுகளாக திருமுருகன் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் சீரமைப் பணிகள் முடிந்து, கும்பாபி ேஷக ஏற்பாடுகள் நடந்தன.
கடந்த 15ம் தேதி கணபதி பூஜை, கோ பூஜை, நவகிரக பூஜை நடந்தது. யாகசாலை பூஜைகள் நடந்தன.
நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்த, திருமுருகன் கோவில் கோபுர கலசத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
முருகன் சமேத வள்ளி தெய்வானை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், கோபுர கலசத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
கும்பாபி ேஷகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 'ஓம் முருகா... அரோகரா...' என்ற கோஷங்களுடன் சாமி தரிசனம் செய்தனர். திருமுருக பக்த ஜனா சபா சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.