/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லஸ் கார்னர் பகுதியில் கும்மிருட்டு தெருவிளக்குகள் இல்லாமல் அவதி
/
லஸ் கார்னர் பகுதியில் கும்மிருட்டு தெருவிளக்குகள் இல்லாமல் அவதி
லஸ் கார்னர் பகுதியில் கும்மிருட்டு தெருவிளக்குகள் இல்லாமல் அவதி
லஸ் கார்னர் பகுதியில் கும்மிருட்டு தெருவிளக்குகள் இல்லாமல் அவதி
ADDED : ஜன 18, 2024 12:31 AM
மயிலாப்பூர்,மெட்ரோ ரயில் பணி காரணமாக லஸ் கார்னர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அப் பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தட பணிகளுக்காக பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் பகுதியிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, மயிலாப்பூர் டாங்க், தங்கவேல் நாடார் ஸ்டோர் அருகில், லஸ் கார்னர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த பகுதியில் தெரு விளக்குகள் குறைவாக இருப்பதால், இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாமல் வாகனங்கள் தடுமாறிச் செல்கின்றன.
அப்பகுதியில் பயணிப்போர் கூறியதாவது:
மெட்ரோ ரயில் பணிக்காக தற்காலிகமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, மயிலாப்பூர் பகுதியில், கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆனால், இப்பகுதியில் போதுமான தெருவிளக்குகள் இல்லாததால், வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. இதனால், அவ்வப்போது விபத்தை சந்திக்க நேரிடுகிறது. அதே போல, பாதசாரிகளும், வெளிச்சமின்றி விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்ட போது, 'போக்குவரத்து காவல் துறை மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆகியவை இணைந்து லஸ் கார்னர் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.