/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிய திட்டங்களை வடிவமைக்க பொறியாளரை தேடும் ' கும்டா '
/
புதிய திட்டங்களை வடிவமைக்க பொறியாளரை தேடும் ' கும்டா '
புதிய திட்டங்களை வடிவமைக்க பொறியாளரை தேடும் ' கும்டா '
புதிய திட்டங்களை வடிவமைக்க பொறியாளரை தேடும் ' கும்டா '
ADDED : ஆக 18, 2025 02:39 AM
சென்னை:சென்னை பெருநகருக்கான புதிய போக்குவரத்து மேலாண்மை திட்டங்களை தயாரிப்பதற்காக, போக்குவரத்து பொறியாளர் ஒருவரை நியமிக்க, 'கும்டா' எனப்படும் போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது.
சென்னை பெருநகரில் மாநகர பேருந்து, புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில் என, வெவ்வேறு வகை போக்குவரத்து சேவைகள் அமலில் உள்ளன. சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், இந்த சேவையை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.
இதில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, 2010ல் கும்டா துவங்கப்பட்டது. இந்த குழுமம், தமிழக முதல்வர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இதில், பல்வேறு பிரிவுகளில் துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக, பல்வேறு துறைகளில் இருந்து, அதிகாரிகள் அயல்பணியில் வந்துள்ளனர்.
இத்துடன், ஒப்பந்த முறையில் கலந்தாலோசனை நிறுவனங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், சாலை சந்திப்புகள் மேம்பாடு, போக்குவரத்து முனையங்கள் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு, வாகன நிறுத்துமிடங்கள் உருவாக்குதல் போன்ற தலைப்புகளில், புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
இதற்காக போக்குவரத்து பொறியாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரை நி யமிக்க கும்டா முடிவு செய்துள்ளது.
அரசு துறை அதிகாரிகளை தவிர்த்து, வெளியில் இருந்து ஒப்பந்த அடிப்படையில், இதற்கான நபரை தேர்வு செய்ய கும்டா முடிவு செய்துள்ளது. விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும்.