/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குத்தப்பாக்கம் பஸ் நிலையம் மார்ச்சில் திறப்பு: சேகர்பாபு
/
குத்தப்பாக்கம் பஸ் நிலையம் மார்ச்சில் திறப்பு: சேகர்பாபு
குத்தப்பாக்கம் பஸ் நிலையம் மார்ச்சில் திறப்பு: சேகர்பாபு
குத்தப்பாக்கம் பஸ் நிலையம் மார்ச்சில் திறப்பு: சேகர்பாபு
ADDED : நவ 03, 2024 12:46 AM
கொளத்துார்,
''குத்தப்பாக்கம் பஸ் நிலைய பணிகள் முடிந்து வரும் மார்ச்சில் திறக்கப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், கொளத்துார் அகரம் ஜெகந்நாதன் சாலையில், 'முதல்வர் படைப்பகம்' கட்டுமானப் பணிகளையும், பெரியார் நகர் பேருந்து நிலைய பணிகளையும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
அதன்பின், அவர் அளித்த பேட்டி:
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள், அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டாலும், சரியான திட்டமிடல் இல்லாமல் இருந்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும்,
முடிச்சூரில், 42 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய பணிகள், 95 சதவீதம் முடிந்துள்ளன. விரைவில், முதல்வர் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார். குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளும் முடிந்து, மார்ச் மாதத்தில் திறக்க திட்டமிட்டுள்ளோம்.
பெரியார் நகர், திரு.வி.க.,நகர், முல்லை நகர், அம்பத்துார், ஆர்.கே.நகர் உட்பட, 7 இடங்களில், தேவையான அனைத்து வசதிகளுடன் புதிய பேருந்து நிலையங்கள் வடிவமைப்பு பணி நடந்து வருகிறது.
முதல்வர் தொகுதியில் கட்டப்பட்டு வரும் பெரியார் நகர் பேருந்து நிலையம், ஜனவரி அல்லது பிப்ரவரியில் திறக்கப்படும்.
மாமல்லபுரம் மற்றும் செங்கல்பட்டில், தலா ஒரு பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு டிசம்பருக்குள், 18 பேருந்து நிலையங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
14 லட்சம் பேர்
வரும் 7ம் தேதி நடக்க உள்ள திருச்செந்துார் கந்த சஷ்டி திருவிழாவிற்கு, 6 லட்சம் பேர்; திருக்கல்யாணத்திற்கு 2 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக கந்த சஷ்டி விழாவிற்கு, 14 லட்சம் பேர் வந்து செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கந்த சஷ்டி திருநாளில், 12 திருக்கோவில்களில், இந்து சமய அறநிலையத்துறை கல்வி நிறுவனங்களின் மாணவ - மாணவியரும், இசைக்கல்லுாரி மாணவ - மாணவியர், 738 பேரை வைத்து, கந்த சஷ்டி பாராயணமும் படிக்கப்பட உள்ளது.
இவ்வாறு சேகர்பாபு கூறினார்.