/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தலையில் கல்லை போட்டு கூலி தொழிலாளி கொலை
/
தலையில் கல்லை போட்டு கூலி தொழிலாளி கொலை
ADDED : ஜன 28, 2025 01:00 AM
யானைகவுனி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் சதாப் அலி, 26. இவர், பார்க்டவுன், பொன்னப்ப செட்டித் தெருவில் உள்ள பாத்திரக்கடையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடையின் உரிமையாளர் ஹரிஷ்குமார், நேற்று முன்தினம் கடையில் வந்து பார்த்த போது, தலையில் கல்லைப் போட்டு சதாப் அலி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த அவர், யானைக்கவுனி போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சதாப் அலியின் உடலைக் கைப்பற்றி விசாரித்தனர்.
அதில், கடந்த 25ம் தேதி, சதாப் அலி, அவரின் நண்பர் சலீம் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது, போதையில் சதாப் அலியின் மொபைல் போனை சலீம் உடைத்துள்ளார். அதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சலீம், அருகில் இருந்த எடைக்கல்லை எடுத்து தலையில் போட்டு, சதாப் அலியை கொன்றுவிட்டு தப்பியுள்ளார். போலீசார், சலீமை தேடி வருகின்றனர்.