ADDED : நவ 29, 2026 08:49 PM
அ நிறம் | அளவு
பாடி: சாலையோரத்தில் 31 வயதான தொழிலாளி குட்டி என்பவர் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாடி, ஜகதாம்பிகை நகர், சுந்தரர் தெருவில், நேற்று (நவ.,28) இரவு 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக, கொரட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
இதில், இறந்த நபர், பாடி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த குட்டி, 41, என்பதும், சுமை துாக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரிந்தது. குட்டியின் இறப்பிற்கான காரணம் குறித்து கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
