/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நில தொகுப்பு திட்டம் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
நில தொகுப்பு திட்டம் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 20, 2024 12:36 AM

தாம்பரம்,மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரி, பதுவஞ்சேரி, கோவிலாஞ்சேரி, அகரம்தென் ஆகிய பகுதிகளில், நில தொகுப்பு திட்டத்தின் கீழ், 620 ஏக்கர் நிலத்தை மேம்படுத்த, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.
இதற்காக, நில உரிமையாளர்கள், விவசாயிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க., அரசை கண்டித்தும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பதுவஞ்சேரி - மப்பேடு சந்திப்பில் நேற்று, கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட செயலர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இப்பகுதியில் உள்ள, 620 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த தி.மு.க., அரசு முயற்சித்து வருகிறது. தாம்பரம் தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜா, விவசாயிகளை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
வரும் தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், இத்திட்டம் வீட்டிற்கு அனுப்பப்படும் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பேசினர்.

