தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நில ஆவணங்களுக்கான இணைதளம் முடக்கம்

 நில ஆவணங்களுக்கான இணைதளம் முடக்கம்

 நில ஆவணங்களுக்கான இணைதளம் முடக்கம்


ADDED : ஏப் 07, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 10:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;நிலங்களின் பட்டா, சிட்டா, வரைபடம் போன்ற பிரதிகளை பெறுவதற்கான ஒருங்கிணைந்த இணையதளம் மூடப்படுகிறது.

தமிழகத்தில் நிலங்களின் பட்டா, சிட்டா, வரைபடம் போன்ற விபரங்களை, பொது மக்கள் எளிதாக அறிய, வருவாய் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, பல்வேறு வகையான புதிய சேவைகளை, வருவாய் துறை அறிமுகம் செய்து வருகிறது.

இதற்காக, clip.tn.gov.in/clip/ என்ற இணையதள சேவையை, வருவாய் துறை சில ஆண்டுகளுக்கு முன் துவக்கியது. இதில் ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பட்டா, சிட்டா, வரைபடம், சொத்து வரி நிலுவை, குடிநீர் கட்டண நிலுவை, உரிமையியல் வழக்குகள், கடன் நிலுவை, இ - அடங்கல், வில்லங்கச் சான்று ஆகிய விபரங்களை, ஒரே தேடலில் பெறலாம்.

ஒவ்வொரு கட்டமாக, இந்த இணையதள சேவையை, வருவாய் துறை மேம்படுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, இந்த இணையதளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விசாரித்தபோது, 'இந்த இணையதளத்தில் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை பொது மக்கள், இனி, eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே சேவைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்கள் வேண்டாம் என்ற நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என, அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us