/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியோர் இல்லம், விடுதிகள் பதிவு செய்ய வரும் 30 கடைசி
/
முதியோர் இல்லம், விடுதிகள் பதிவு செய்ய வரும் 30 கடைசி
முதியோர் இல்லம், விடுதிகள் பதிவு செய்ய வரும் 30 கடைசி
முதியோர் இல்லம், விடுதிகள் பதிவு செய்ய வரும் 30 கடைசி
ADDED : நவ 04, 2024 04:45 AM
சென்னை:சென்னை மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள், சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பதிவு செய்யாமல் செயல்படும் விடுதிகள், அந்தந்த இணையதளம் வாயிலாக ஒரு மாதகால அவகாசத்துக்குள், அதாவது வரும் 30ம் தேதிக்குள், பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முதியோர் இல்லங்கள், https://www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in என்கிற தளத்திலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், https://tnswp.com என்கிற தளம் அல்லது சமூக நலன் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மறுவாழ்வு இல்லங்கள், https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php அல்லது கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையிலும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லம், மாற்றுத்திறனாளி இல்லங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.
பதிவு செய்யாத இல்லங்கள், விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்படும் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.