/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் சீண்டல் சட்ட மாணவர் கைது
/
பெண்ணிடம் சீண்டல் சட்ட மாணவர் கைது
ADDED : பிப் 22, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவரம், சோழவரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த, 27 வயது திருமணமான பெண் ஒருவர், காரனோடை பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.
சோழவரம் அடுத்த மேட்டு சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த உதயபாபு, 23, என்பவர் அடிக்கடி கடைக்கு சென்று அப்பெண்ணிடம் பேசி வந்தார். இவர் சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், உதயபாபு பாலியல் தொல்லை கொடுப்பதாக, சோழவரம் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிந்து, உதயபாபுவை நேற்று கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.