/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சட்ட பல்கலை மாணவர்கள் போலீசாரை கண்டித்து பேரணி
/
சட்ட பல்கலை மாணவர்கள் போலீசாரை கண்டித்து பேரணி
ADDED : ஜூன் 28, 2025 02:21 AM
தரமணி:காவல் நிலையத்தை முற்றுகையிட, பேரணியாக புறப்பட்ட தரமணி சட்டப் பல்கலை மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.
தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில், மாணவியர் தங்கும் விடுதியில் உள்ள பிரச்னைகளை சரி செய்யக்கோரி, 150 மாணவியர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த வழக்கறிஞர் உட்பட நான்கு பேரை, பெண் எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் வெளியேற்றினர். இதை கண்டித்து, தரமணி சட்டப் பல்கலை மாணவர்கள், தரமணி காவல் நிலையத்தை முற்றுகையிட முடிவு செய்தனர்.
இதையடுத்து, தரமணி ரயில் நிலையத்தில் இருந்து காவல் துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு, சட்டப் பல்கலை மாணவர்கள் நேற்று பேரணியாக கிளம்பினர்.
மாணவர்களை, துரைப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் சங்கு, தரமணி இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் தடுத்து நிறுத்தி, பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து, பேரணியை பாதியிலேயே கைவிட்டு, மாணவர்கள் கலைந்து சென்றனர்.