/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் சில்மிஷம் புழல் வழக்கறிஞர் கைது
/
பெண்ணிடம் சில்மிஷம் புழல் வழக்கறிஞர் கைது
ADDED : டிச 06, 2024 12:33 AM

புழல், பொன்னேரியைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண், அம்பத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடித்து, அம்பத்துாரில் இருந்து தடம் எண்: 62 மாநகர பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, 60 வயது மதிக்கத்தக்க நபர் இவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அப்பெண் நடத்துனரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, புழல் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி, அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், சில்மிஷத்தில் ஈடுபட்டது புழல், அந்தோணியார் கோவில், மூன்றாவது தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் குருமூர்த்தி, 58, என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.