/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வி.சி.,க்களால் தாக்கப்பட்ட வக்கீல் விசாரணைக்கு ஆஜர்
/
வி.சி.,க்களால் தாக்கப்பட்ட வக்கீல் விசாரணைக்கு ஆஜர்
வி.சி.,க்களால் தாக்கப்பட்ட வக்கீல் விசாரணைக்கு ஆஜர்
வி.சி.,க்களால் தாக்கப்பட்ட வக்கீல் விசாரணைக்கு ஆஜர்
ADDED : அக் 26, 2025 01:29 AM
எஸ்பிளனேடு: வி.சி., கட்சியனரால் தாக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜிவ்காந்தி, கழுத்து வலிக்கான பட்டை அணிந்தபடி, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில், விசாரணைக்கு ஆஜரானார்.
கடந்த 7 ம்தேதி, வி.சி., சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இங்கு பங்கேற்ற வி.சி., தலைவர் திருமாவளவன் காரில் திரும்பியபோது, முன்னாள் சென்ற ஸ்கூட்டர் மீது, திருமாவளவனின் கார் மோதியது.
இதனால், ஸ்கூட்டரில் சென்ற நந்தம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞரும், அ.தி.மு.க., வட்ட செயலருமான ராஜிவ்காந்தி நிலை தடுமாறினார். காரில் இருந்தவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த வி.சி., வழக்கறிஞர்கள், ராஜிவ்காந்திமீது தாக்குதல் நடத்தினர். இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அக்., 25ல் விசாரணைக்கு ஆஜராகும்படி, எஸ்பிளனேடு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதையடுத்து, வழக்கறிஞர் ராஜிவ்காந்தி, கழுத்துவலிக்கான பட்டை அணிந்தபடி நேற்று காலை 11:00 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜரானார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
வி.சி., கட்சியினர் நேற்று மாலை 6:00 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இருதரப்பு விளக்கத்தையும் போலீசார் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

