தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாசில்தாரை தாக்கிய வழக்கறிஞர் கைது

தாசில்தாரை தாக்கிய வழக்கறிஞர் கைது

தாசில்தாரை தாக்கிய வழக்கறிஞர் கைது


ADDED : செப் 28, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 09:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடக்கு கடற்கரை: வரி பாக்கியை செலுத்தக் கூறிய, 41 வயது தாசில்தார் கன்னத்தில் அறைந்த வழக்கில், 45 வயது வழக்கறிஞரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

அம்பத்துார், கங்கை தெருவைச் சேர்ந்தவர் ஹரிகரன், 41. இவர், ராயபுரம் மண்டலத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் சிறப்பு தாசில்தாராக பணியாற்றுகிறார்.

மண்ணடி, இப்ராஹிம் சாலையில் செல்வகுமார், 45, என்பவருக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. இதன் தரைத்தளத்தில், டீக்கடை மற்றும் தனியார் அலுவலகம் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் வீடுகளும் உள்ளன.

இக்கட்டடத்திற்கு, சொத்துவரி மற்றும் கழிவுநீர் வரி, 12 ஆண்டுகளாக செலுத்த வில்லை. இதை செலுத்த கூறி, குடிநீர் வாரியம் சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

செல்வகுமார் பணம் செலுத்தாததால், கடந்த 22ம் தேதி தாசில்தார் ஹரிகரன், தரைத்தளத்தில் உள்ள கடைகளுக்கு ‘சீல்ʼ வைக்க சென்றபோது, செல்வகுமார் உட்பட ஐந்து பேர் சேர்ந்து, தாசில்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினர்.

இது தொடர்பாக செல்வகுமார் உட்பட இருவரை, வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்து சிறையில் உள்ளனர். தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் சரவணன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்து, விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us