/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழக்கறிஞர் வெட்டிக்கொலை அழுகிய நிலையில் உடல் மீட்பு
/
வழக்கறிஞர் வெட்டிக்கொலை அழுகிய நிலையில் உடல் மீட்பு
வழக்கறிஞர் வெட்டிக்கொலை அழுகிய நிலையில் உடல் மீட்பு
வழக்கறிஞர் வெட்டிக்கொலை அழுகிய நிலையில் உடல் மீட்பு
ADDED : மார் 31, 2025 03:37 AM
விருகம்பாக்கம்:விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அழுகிய நிலையில் அவரது உடலை போலீசார் நேற்று மீட்டனர்.
விருகம்பாக்கம், கணபதி ராஜ் நகர் பிரதான சாலையில் உள்ள குடியிருப்பில் இருந்து, துர்நாற்றம் வீசுவதாக, அக்கம் பக்கத்தினர் விருகம்பாக்கம் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். வீட்டின் முன் பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. அதேநேரம், பின்பக்க கதவு பூட்டப்படவில்லை.
உள்ளே சென்று பார்த்த போது, ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வெட்டிய கத்தியும் முகத்தில் அப்படியே இருந்தது. உடல் அழுகி, துர்நாற்றம் வீசியதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில், உயிரிழந்த நபர் ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேசன், 43, என்பதும், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நண்பர் கார்த்திக் என்பவர் வீட்டில் அடிக்கடி வந்து தங்கியிருந்ததும் தெரியவந்தது.
போலீசார் அவரது உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தேடி வருகின்றனர்.