ADDED : ஜூலை 26, 2025 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதவரம், வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் மாதவரம் நீதிமன்றத்திற்கு, அரசு இடத்தில் கட்டடம் கட்டித் தரக்கோரி, மண்டல அலுவலகம் முன், வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகே, மாதவரம் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு, குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் உள்ளன.
'வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நீதிமன்றத்திற்கு, அரசு இடத்தில் கட்டடம் கட்டித்தர வேண்டும். நீதிமன்றம் வரும் மக்களுக்கு குடிநீர், கழிப்பழை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்' என கோரி, மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே, வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.