தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பழம்பெரும் நடிகர் மறைவு

பழம்பெரும் நடிகர் மறைவு

பழம்பெரும் நடிகர் மறைவு


ADDED : ஜூன் 27, 2025 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2025 12:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை நடன இயக்குனர் புலியூர் சரோஜா கணவரும், நடிகருமான சீனிவாசன் வயது மூப்பு காரணமாக, நேற்று சென்னையில் காலமானார்.

சென்னை, அசோக் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சீனிவாசன், 95. இவர், பிரபல நடன இயக்குனர் புலியூர் சரோஜாவின் கணவர். பாரதிராஜாவின் 'புதியவார்ப்புகள், கிழேக்கே போகும் ரயில்' உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.

சினிமாவில் வசனகர்த்தா, இயக்குனர் என பல வகையில் பணியாற்றியுள்ளார். அரசின் 'கலைமாமணி' உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவர், வயது மூப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். இறுதிச்சடங்கு நாளை வடபழனியில் நடக்க உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த சீனிவாசனுக்கு சத்தியநாராயணன் என்ற மகன் இருந்தார். அவர், 30 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us