/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழுநோய் விழிப்புணர்வு ஸ்டான்லியில் பேரணி
/
தொழுநோய் விழிப்புணர்வு ஸ்டான்லியில் பேரணி
ADDED : ஜன 31, 2024 12:23 AM

ராயபுரம், உலக தொழுநோய் தினம், ஜன., 30ல் கடைப்பிடிக்கப்படுகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில், தொழுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் நேற்று மருத்துவமனை வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
'தீண்டாமை ஒழிப்பு மற்றும் கண்ணியத்தை தழுவுதல்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி முதல்வர் பாலாஜி கூறியதாவது:
உலகளவில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோரில், இந்தியாவில் மட்டும் 58.8 சதவீதம் பேர் உள்ளனர். தேசிய தொழுநோய் கட்டுப்பாடு திட்டம், நாட்டில் முதன் முறையாக 1955ல் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, 1983ல் இந்த திட்டம் 'தேசிய தொழுநோய் ஒழிப்பு' திட்டமாக மாற்றப்பட்டது.
தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு 1,500 ரூபாய் ஓய்வூதியமும், மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்ய 12,000 ரூபாய் உதவி தொகையும் தமிழக அரசு வழங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.