/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றி யோசிக்க பழகுவோம்; பாடங்களை புரிந்து படிப்போம்! மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி ஆலோசனை 'வெற்றிப்படிகளுக்கு இது மிகப் பெரிய மேடை'
/
மாற்றி யோசிக்க பழகுவோம்; பாடங்களை புரிந்து படிப்போம்! மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி ஆலோசனை 'வெற்றிப்படிகளுக்கு இது மிகப் பெரிய மேடை'
மாற்றி யோசிக்க பழகுவோம்; பாடங்களை புரிந்து படிப்போம்! மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி ஆலோசனை 'வெற்றிப்படிகளுக்கு இது மிகப் பெரிய மேடை'
மாற்றி யோசிக்க பழகுவோம்; பாடங்களை புரிந்து படிப்போம்! மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி ஆலோசனை 'வெற்றிப்படிகளுக்கு இது மிகப் பெரிய மேடை'
ADDED : பிப் 04, 2024 01:55 AM

சென்னை: ''மாணவர்கள் பாடங்களை படிப்பது மட்டுமின்றி, மாற்றி யோசித்து, சிக்கலான அம்சங்களை எளிதில் தீர்க்கும் வகையில், பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்,'' என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறியுள்ளார்.
'தினமலர்' நாளிதழ் பட்டம் மாணவர் பதிப்பின், வினாடி - வினா விருது இறுதி போட்டியில், தலைமை விருந்தினராக பங்கேற்ற, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசியதாவது:
தினமும் ஒரு மலர் பூக்கிறது என்றால், அது 'தினமலர்' தான். இந்த நாளிதழ், மாணவர்களின் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை, ஆண்டு முழுதும் நடத்துகிறது. பட்டம் மாணவர் பதிப்பு போட்டிகளும், மாணவர்களின் வெற்றிக்கான நிகழ்ச்சியாகும்.
எங்கள் ஐ.ஐ.டி.,யில், வரும் கல்வி ஆண்டு முதல், விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு அறிமுகமாகிறது. இளநிலை பட்டப்படிப்பில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், ஒரு மாணவி உட்பட தலா, 2 பேருக்கு இடம் ஒதுக்க உள்ளோம். எங்கள் ஐ.ஐ.டி., மாணவரும், ஒலிம்பிக் போட்டியில் விருது பெற வேண்டும் என்பது எங்கள் கனவாகும். அது, மாணவர்களான உங்களால் மட்டுமே நடக்கும்.
எந்த ஒரு போட்டியிலும், போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெற, குறிப்பிட்ட நேரத்தில், சரியான பதிலை தெரிவிக்க வேண்டியதும், பாடங்களை புரிந்து படிப்பதும் முக்கியம். இதற்காக, ஐ.ஐ.டி.,யில், 'அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங்' என்ற ஆன்லைன் படிப்பு இலவசமாக நடத்தப்படுகிறது.
இந்த படிப்பில் சேர்ந்தால், மாற்றி யோசித்து, சிக்கலான அம்சங்களை எளிதில் தீர்க்கும் வகையில், பாடங்களை படிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் பி.ஸ்ரீராம் பேசியதாவது:
'தினமலர்' நாளிதழ் எப்போதும் மாணவர் நலன் சார்ந்த ஊடகமாக செயல்படுகிறது. தற்போதைய காலத்தில், தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
எனவே, வெளிநாடுகளுக்கு இணையான தொழில்நுட்பத்தை இந்தியாவில் ஏற்படுத்த, பிரதமர் மோடி திட்டங்கள் வகுத்துள்ளார்.
இந்தியா வல்லரசாக மாற, நம் நாடு, அறிவுசார் நாடுகளில் முன்னணியில் இடம் பெற வேண்டும். இதற்கு நாம் தொழில்நுட்ப ஆராய்ச்சி கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அந்த படிப்புகளில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.
எனவே, மாணவர்கள் பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். கல்வி தான் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆர்.தேன்மொழி,
முதல் இடம் பிடித்த தேவஸ்ரீயின் தாய்.
- டி. செந்தில்குமார்,
ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ராமாபுரம்.
- ஜி. சந்திரிகா,
ஆசிரியை, சுதந்திரா மெட்ரிக் பள்ளி,
திருத்தணி.
- எம்.யாகினி,
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி,
ராமாபுரம்.
- எஸ்.அபிராமி,
வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி மாணவி,
அயப்பாக்கம்.
- எஸ். சான்வி,
சுதந்திரா மெட்ரிக் பள்ளி மாணவி, திருத்தணி.
-ம.கவின்மதி, ர.தேவஸ்ரீ,
முதல் பரிசு பெற்ற மாணவியர், ஸ்ரீ சங்கர வித்யாலயா ஊரப்பாக்கம்.