/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பானி பூரிக்கு காசு தராத எல்.ஐ.சி., ஊழியர் கைது
/
பானி பூரிக்கு காசு தராத எல்.ஐ.சி., ஊழியர் கைது
ADDED : பிப் 19, 2025 12:28 AM
கோடம்பாக்கம், - சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத், 40. இவர், சூளைமேடு - கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள நலன் செக்கு எண்ணெய் கடையில் பணிபுரிகிறார்.
இவரது கடையின் அருகே உள்ள பானிபூரி கடையில், கடந்த 16ம் தேதி இருவர் பானி பூரி சாப்பிட்டு, பணம் கேட்டதற்கு தர மறுத்து தகராறு செய்தனர். இதை, பிரசாத் தட்டிக் கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த இருவரும், பிரசாத்தை தாக்கினர். இதில், காயமடைந்த பிரசாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கோடம்பாக்கம் போலீசாரின் விசாரணையில், கோடம்பாக்கம் தாஸ்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகேஷ், 28, சூளைமேடு பெரியார் பாதையைச் சேர்ந்த விருகம்பாக்கம் எல்.ஐ.சி., ஒப்பந்த ஊழியர் ஆனந்தன், 25, என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், பின் ஜாமினில் விடுவித்தனர்.