/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பீமா சகி யோஜனா' திட்டத்திற்கு எல்.ஐ.சி., புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
'பீமா சகி யோஜனா' திட்டத்திற்கு எல்.ஐ.சி., புரிந்துணர்வு ஒப்பந்தம்
'பீமா சகி யோஜனா' திட்டத்திற்கு எல்.ஐ.சி., புரிந்துணர்வு ஒப்பந்தம்
'பீமா சகி யோஜனா' திட்டத்திற்கு எல்.ஐ.சி., புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜூலை 23, 2025 12:27 AM
சென்னை கிராமப்புறங்களில் 'பீமா சகி யோஜனா' திட்டத்தை ஊக்குவிக்க, மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறையுடன் இணைந்து, எல்.ஐ.சி., புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து, எல்.ஐ.சி., நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
எல்.ஐ.சி., நிறுவனம், கிராமப்புறங்களில் 'பீமா சகி யோஜனா' திட்டத்தை ஊக்குவிக்க, மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறையுடன் இணைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், கோவாவில் நடந்த 'அனுபூதி' என்ற தேசிய நிதி சேர்க்கை மாநாட்டின் போது கையெழுத்தானது. 'பீமா சகி யோஜனா' திட்டம், காப்பீட்டு வணிகத்தில் பெண்கள் வலுவான இடத்தை பெற உதவும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், செயல் திறன் சார்ந்த உதவித்தொகை வழங்குவது மட்டுமின்றி, முகவர்களுக்கான மற்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் படி, முகவர்களுக்கு சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, முதல் ஆண்டில் 7,000, இரண்டாம் ஆண்டு 6,000, மூன்றாம் ஆண்டு 5,000 ரூபாய் உதவித் தொகை, மாதந்தோறும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.