ADDED : பிப் 16, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், 40, நண்பர், செங்குன்றம் கலியமூர்த்தி, 40, உடன் வாகனங்களுக்கு பைனான்ஸ் வழங்கி வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், 2013ல், ஆவடி ரயில் நிலையம் அருகே, பிரபாகரன் கொலை செய்யப்பட்டார்.
ஆவடி போலீசார், இவ்வழக்கில் கலியமூர்த்தி, கொளஞ்சி, 35, தாமோதரன், 36, உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர்.
பூந்தமல்லி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
கலியமூர்த்தி, கொளஞ்சி, தாமோதரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 1,500 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால், மேலும் ஒன்பது மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.