/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமிக்கு கொடுமை வாலிபருக்கு ஆயுள்
/
சிறுமிக்கு கொடுமை வாலிபருக்கு ஆயுள்
ADDED : அக் 25, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி: கண்ணகி நகரைச் சேர்ந்த சாமுவேல், 34. இவர், 2020 அக்டோபரில், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். செம்மஞ்சேரி மகளிர் போலீசார், சாமுவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் போது, 18 ஆவணங்களுடன், 10 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, சாமுவேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.

