/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கலங்கரை விளக்கம் - திருமயிலை இடையே மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
/
கலங்கரை விளக்கம் - திருமயிலை இடையே மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
கலங்கரை விளக்கம் - திருமயிலை இடையே மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
கலங்கரை விளக்கம் - திருமயிலை இடையே மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
ADDED : பிப் 28, 2026 05:28 AM

சென்னை: கலங்கரை விளக்கம் - திருமயிலை இடையே, மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி, நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
சென்னையில் இரண்டாம் கட்டமாக, மூன்று வழித்தடங்களில், 119 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி பைபாஸ் வரை 26.1 கி.மீ., வழித்தடமும் ஒன்று.
கலங்கரை விளக்கத்தில் இருந்து திருமயிலை வரை, கழுகு எனும் சுரங்கம் தோண்டும் இயந்திரம், கடந்த 9ம் தேதி வெற்றிகரமாக தன் பணியை முடித்து வெளியேறியது.
இதற்கிடையே, 'பிளமிங்கோ' என பெயரிடப்பட்ட மற்றொரு சுரங்கம் தோண்டும் இயந்திரம், கலங்கரை விளக்கத்தில் இருந்து திருமயிலை வரை, இரண்டாவது சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து, நேற்று வெளியேறியது.
பாறை அடுக்குகள், இரண்டு சுரங்கங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அமைக்கப்பட்டதால் உருவான அதிகப்படியான ஆழம் மற்றும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட எரிவாயு கசிவு போன்ற சவாலான புவியியல் சூழல்களைக் கடந்து, இந்தத் துளையிடும் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
'பிளமிங்கோ, கழுகு' என்று அழைக்கப்படும் இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும், திருமயிலையில் இருந்து போர்ட் கிளப் நோக்கி செல்லும் அடுத்தகட்டப் சுரங்கப்பாதை பணிகளுக்காக மீண்டும் இயக்கப்பட உள்ளன.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமைப் பொது மேலாளர் முரளி, பொதுமேலாளர் ரங்கநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.

