தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/'லிங்க்' வந்தது; ரூ.85,000 போனது

'லிங்க்' வந்தது; ரூ.85,000 போனது

'லிங்க்' வந்தது; ரூ.85,000 போனது


ADDED : பிப் 28, 2024 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 12:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புளியந்தோப்பு, பட்டாளம், டிமலஸ் சாலையைச் சேர்ந்தவர் ராஜேஷ், 33. இவருக்கு, கடந்த 24ம் தேதி மாலை தனியார் வங்கி பெயருடன், அவரது மொபைல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதை 'க்ளிக்' செய்த போது, ஓ.டி.பி.,யும் வந்துள்ளது. ஆனால், ராஜேஷ் அந்த ஓ.டி.பி.யை யாருக்கும் பகிரவில்லை.

ஆனாலும், அவரது கிரெடிட் கார்டில் இருந்து, 85,451 ரூபாய் மூன்று தவணையாக எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பணத்தை இழந்த ராஜேஷ், அதை மீட்டு தரக்கோரி, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆன்லைன் மோசடி குறித்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பலரும் ஏமாந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us