/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழையால் நிரம்பிய 59 குளம் சென்னை மாநகராட்சி பட்டியல்
/
மழையால் நிரம்பிய 59 குளம் சென்னை மாநகராட்சி பட்டியல்
மழையால் நிரம்பிய 59 குளம் சென்னை மாநகராட்சி பட்டியல்
மழையால் நிரம்பிய 59 குளம் சென்னை மாநகராட்சி பட்டியல்
ADDED : அக் 20, 2024 12:18 AM
சென்னை, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர் நிலைகளை மேம்படுத்தும் வகையில், மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள், குளங்கள் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது பெய்த கனமழையால், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன.
குறிப்பாக, திருவொற்றியூர் மண்டலம் தாமரைக்குளம், மணலி மண்டலம் எலந்தனுார் குளம், பர்மா நகர் குளம், கன்னியம்மன்பேட்டை குளம், காமராஜபுரம் குளம், வடபெரும்பாக்கம் குளம், விநாயகபுரம் மயானபூமி குளம், தீயம்பாக்கம் குளம், தீயம்பாக்கம் காந்திநகர் குளம் ஆகியவை நிரம்பியுள்ளன.
அம்பத்துார் மண்டலத்திற்கு உட்பட்ட வைரக்குளம், சிவாவிஷ்ணு குளம் நிரம்பியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட அகத்தீஸ்வர் கோவில் குளம் உட்பட 59 குளங்களில் மழைநீர் நிரம்பியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.