ADDED : மே 14, 2025 01:16 AM
* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 510 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 17௭ ரூபாய் முதல், 187.49 ரூபாய்; இரண்டாம் தரம், 13௭ ரூபாய் முதல், 175 ரூபாய் வரை, 21,562 கிலோ கொப்பரை, 37.௫9 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 46 மூட்டை எள் வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 106.69 முதல், 120.59 ரூபாய்; சிவப்பு ரகம், 95.60 முதல், 120.66 ரூபாய் வரை, 3,181 கிலோ எள், 3.௫௪ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 7,575 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 35 ரூபாய் முதல் -44 ரூபாய் வரை விற்றது. 39 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, ஒரு கிலோ 164-176 ரூபாய்; 12 மூட்டை எள் வரத்தாகி, கிலோ 103-120 ரூபாய்; நான்கு மூட்டை ஆமணக்கு வரத்தாகி கிலோ, 76 ரூபாய்க்கும் விற்றது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ ஒரு கிலோ, 60௦ ரூபாய்க்கு ஏலம்போனது. முல்லை பூ, 160, காக்கடா, 320, செண்டுமல்லி, 140, கோழிகொண்டை, 80, ஜாதி முல்லை, 600, கனகாம்பரம், 450, சம்பங்கி, 30, அரளி பூ, 120, துளசி, 70, செவ்வந்தி, 240 ரூபாய்க்கும் விற்பனையானது.
* சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. சுற்று வட்டார விவசாயிகள், 883 தேங்காய் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 35.௧௦ ரூபாய் முதல், 52.௧௦ ரூபாய் வரை ஏலம் போனது.
* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 570 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 60.36 முதல், 73.30 ரூபாய் வரை, 18,476 கிலோ நிலக்கடலை, 11.௯௪ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

