ADDED : செப் 06, 2026 03:53 PM
சென்னை: சென்னை இளம் வீரர்களுக்கான தேர்வு முகாமில் பங்கேற்க, 14 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 2026 – 27ம் ஆண்டுக்கான உள்ளூர் கிரிக்கெட் சீசனில், 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அணிக்கான திறந்தவெளி தேர்வு போட்டி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் செப்., 21 முதல் 24ம் தேதி வரை நடக்கிறது.
இதில், 2012 செப்., 1 முதல் 2014 ஆக., 31ம் தேதிக்குள் பிறந்தவர்கள் மட்டுமே பங்கேற்க தகுதி பெற்றவர்கள். தமிழகத்தில் பிறந்த, சென்னையில் வசிப்பவர்கள் அல்லது சென்னையில் கல்வி பயிலும் வீரர்கள், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பங்கேற்கலாம்.
சென்னையைச் சேர்ந்த வீரர்கள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் www.tnca.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கான ஆன்லைன் பதிவு, இன்று காலை 10:00 மணிக்கு தொடங்கி, வரும் 14ம் தேதி மாலை 6:00 மணியுடன் நிறைவடைகிறது.
விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், தகுதி பெறும் வீரர்களுக்கு, தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட தகவல்கள் ‘இ – -மெயில்’ மூலம் அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
