/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புது ரேஷன் கடையை திறக்க பகுதிமக்கள் வேண்டுகோள்
/
புது ரேஷன் கடையை திறக்க பகுதிமக்கள் வேண்டுகோள்
ADDED : நவ 12, 2025 12:43 AM

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறக்க வேண்டுமென, பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தண்டையார்பேட்டை, ஜீவா தெரு, அண்ணா தெரு, சேனியம்மன் கோவில் நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள், ரேஷன் பொருட்களை வாங்க தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகரில் உள்ள ரேஷன் கடைக்கு, 2 கி.மீ., செல்ல வேண்டியுள்ளது. அதனால், தங்கள் பகுதியிலே ரேஷன் கடை அமைக்க, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 15 லட்சம் ரூபாய் செலவில், தண்டையார்பேட்டை, கைலாசம் தெருவில் ரேஷன் கடை கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும் திறக்கப்படவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை. ரேஷன் கடையை விரைந்து திறக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

