ADDED : மே 07, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல மாதங்களாக பூட்டியே கிடக்கும் இலவச கழிப்பறை
அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில், சேத்துப்பட்டு, பச்சையப்பன் கல்லுாரியின் பின்புறத்தில் ஹாரிங்டன் சாலை உள்ளது. இந்த சாலையில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு இலவச பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இதன் அருகில், கோவில், குடியிருப்புகள், வணிக ரீதியான கடைகள் உள்ளிட்டவைகளும் உள்ளன.
இப்பகுதியில் உள்ள கழிப்பறைகளை ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். பல மாதங்களாக இக்கழிப்பறை பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், அவ்வழியாக செல்வோர், சாலையிலேயே சிறுநீர் கழித்து செல்கின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தாமோதரன், அண்ணாநகர்.