/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாட்டு வண்டியில் முருக பெருமான் வீதியுலா
/
மாட்டு வண்டியில் முருக பெருமான் வீதியுலா
ADDED : ஜன 18, 2024 12:53 AM

திருத்தணி,
ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் திருவிழாவை ஒட்டி, மூன்று நாட்கள் திருத்தணியில் உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து இறங்கி, வீதிகள் தோறும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதன்படி, மூன்றாம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு படிகள் வழியாக, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சன்னிதி தெருவில் உள்ள கோவில் ஆணையர் குடியிருப்பு முன், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் எழுந்தருளினார்.
பின்னர், அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 8:00 மணிக்கு, மாட்டு வண்டியில் உற்சவ பெருமான் வீதியுலா சென்றார்.
மாலை 5:30 மணிக்கு பழைய பஜார் தெரு அருகில் உள்ள சண்முக தீர்த்த குளம் மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இரவு, 8:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக் கோவிலுக்கு சென்றார். உற்சவர் முருக பெருமான் வீதியுலா வருவதை முன்னிட்டு, நகர் முழுதும் பெண்கள் தெருக்களில் வண்ண வண்ண கோலங்கள் போட்டும், தேங்காய் உடைத்து வழிபட்டனர்.