ADDED : பிப் 03, 2024 12:29 AM
அ நிறம் | அளவு
ஒரகடம், படப்பை, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 40; ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம், 47, என்பவருடன், டிராக்டரில் ஒரகடம் அடுத்த குண்ணவாக்கம் சென்றார். டிராக்டரை மகாலிங்கம் ஓட்டினார்.
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், பனப்பாக்கம் அருகே வந்தபோது, டிராக்டர் மீது லாரி மோதியது. இதில், சீனிவாசன் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. விபத்து ஏற்படுத்திய பம்மலைச் சேர்ந்த லாரி டிரைவர் செபாஸ்டின் அகஸ்டின், 35, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
