ADDED : ஆக 21, 2026 03:43 PM
அ நிறம் | அளவு
பம்மல், ஆக. 22–
திருநீர்மலை அருகே, உரிய அனுமதியின்றி மணலை கடத்திச் சென்ற லாரியை, சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருநீர்மலை, காமராஜர் புரம் பிரதான சாலையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை நடத்தினர். அதில், 4 யூனிட் ஈர மணல் இருந்தது தெரியவந்தது.
உரிய ரசீது மற்றும் அனுமதி இல்லை. அதனாலும், ஈர மணல் ஏற்றி செல்வது விதிமீறல் என்பதாலும், அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றார். சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
