ADDED : மே 10, 2025 12:16 AM

மறைமலைநகர், சேலம் மாவட்டம், ஆத்துாரில் இருந்து மஞ்சள் லோடு ஏற்றிக்கொண்டு, 'அசோக் லேலண்ட்' லாரி, நேற்று அதிகாலை சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
செங்கல்பட்டு, ஆத்துார் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை, 49, என்பவர் ஓட்டி வந்தார். ஜி.எஸ்.டி., சாலையில் சிங்கபெருமாள் கோவில் அடுத்த மெல்ரோசாபுரம் சந்திப்பு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி
கார், இரண்டு மஹிந்திரா வேன்கள், ஒரு கன்டெய்னர் லாரி உள்ளிட்ட ஐந்து வாகனங்கள் மீது மோதியது.
இதில், சரக்கு வாகனத்தின் முன்பக்கம் நொறுங்கி, பொன்னுதுரை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மறைமலைநகர் போக்குவரத்து போலீசார், 'கிரேன்' இயந்திரத்தின் உதவியுடன், சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
விபத்து குறித்து, பொத்தேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

